தலசீமியாவால் (அரிவாளணு இரத்தச் சோகை) பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைவு கூறவும் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிர் வாழ போராடிக் கொண்டு இருக்கும் நோயாளிகளுக்கு ஊக்கமளிக்கவும் வேண்டி உலக தலசீமியா தினமானது ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப் படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான உலக தலசீமியா தினத்தின் கருத்துரு, “Addressing Health Inequalities Across the Global Thalassaemia Community” (உலகளாவிய சமூகத்தின் ஊடாக சுகாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்தல் ) என்பதாகும்.
தலசீமியா என்பது குறைவான ஹீமோகுளோபின் மற்றும் வழக்கமான இரத்த செல்களை விடக் குறைவான இரத்த செல்களையே உற்பத்தி செய்யும் ஒரு இரத்தக் குறைபாட்டு நோயாகும்.