தலாசீமியா பாதிப்பினை ஹீமோகுளோபின் உற்பத்திக் குறைவு அல்லது இல்லாமை நிலையாக வகைப்படுத்தப் படும் சில மரபுவழி இரத்தக் கோளாறுகளின் ஒரு குழுவாக விவரிக்கலாம்.
தலாசீமியா ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கும் மரபணு மாற்றங்கள் ஆகும்.
இதில் பாதிக்கப்பட்ட ஹீமோகுளோபின் சங்கிலியின் அடிப்படையில் இதனை ஆல்பா மற்றும் பீட்டா தலாசீமியா என வகைப்படுத்தலாம்.
பீட்டா - தலாசீமியா மேஜர் என்பது குழந்தைப் பருவத்தில் வெளிப்படுகின்ற, இரத்த சோகையுடன் கூடிய ஒரு பாதிப்பு வடிவமாகும் இதனால் இதற்கு வாழ்நாள் முழுவதும் இரத்தமாற்று சிகிச்சை தேவைப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, "Together for Thalassaemia: Uniting Communities, Prioritising Patients" ஆகும்.