உலக தாய்ப்பால் வழங்கல் வாரம் - ஆகஸ்ட் 01 முதல் 07 வரை
August 3 , 2022 1157 days 440 0
இது உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் உடன் இணைந்து தாய்ப்பாலூட்டும் நடவடிக்கைக்கான உலகக் கூட்டணியால் (WABA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தாய்ப்பால் கொடுப்பதற்கான பாதுகாப்புகளை உருவாக்குவதையும், தாய்ப்பால் ஊட்டுதல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தாய்ப்பாலூட்டும் நடவடிக்கைக்கான உலகக் கூட்டணியானது (WABA) 1991 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்த ஆண்டின் உலக தாய்ப்பால் ஊட்டுதல் வாரத்திற்கான கருத்துரு, 'தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிப்பதற்காக முன் வாருங்கள்: அது பற்றிய கல்வி மற்றும் அதற்கான ஆதரவினை வழங்குதல்' என்பதாகும்.