உலக தெற்கு நாடுகளின் கருத்து வெளிப்பாடு உச்சிமாநாடு
November 24 , 2023 636 days 362 0
இந்திய அரசானது, 2வது உலக தெற்கு நாடுகளின் கருத்து வெளிப்பாடு உச்சி மாநாட்டை (VOGSS) காணொளி வாயிலாக நடத்தியது.
இதன் முதலாவது தலைவர்கள் அமர்வின் கருத்துரு, “அனைவரின் நம்பிக்கையுடன் அனைவரின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு உழைத்தல்” என்பதாகும்.
இதன் நிறைவு அமர்வின் கருத்துரு, “உலக தெற்கு நாடுகள்: ஒரு எதிர்காலத்திற்காக ஒன்றுபட்டு உழைத்தல்” என்பதாகும்.
இந்த தனித்துவமான முன்னெடுப்பு ஆனது, உலகின் 125 நாடுகளை ஒன்றிணைத்து அவற்றின் கண்ணோட்டங்களையும் முன்னுரிமைகளையும் பொதுவான தளத்தில் பகிர்ந்து கொள்ளச் செய்தது.