தைராய்டு சுரப்பியின் முக்கியத்துவம் பற்றியும் தைராய்டு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுத்தல் மற்றும் அதன் சிகிச்சைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக தைராய்டு தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
இந்தத் தினமானது 2008 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
தொண்டைப் பகுதியில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் வடிவில் அமைந்த தைராய்டு சுரப்பியானது T3 (தைராக்சின்) மற்றும் T4 (டிரைஅயாடோதைரோனின்) போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.
இது தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்களால் (TSH) பராமரிக்கப் படுகிறது.