உலக நகரமயமாக்கலுக்கான வாய்ப்புகள் குறித்த அறிக்கை 2025
November 24 , 2025 3 days 61 0
2025 ஆம் ஆண்டு உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை (UN DESA) வெளியிட்டது.
உலகின் 8.2 பில்லியன் மக்களில் 45% பேர் தற்போது நகரங்களில் வசிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
2025 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலக மக்கள்தொகை வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்களில் ஏற்படும் என்று அறிக்கை கூறுகிறது.
2025 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய நகர மக்கள்தொகை வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எகிப்து, வங்காள தேசம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் 500 மில்லியனுக்கும் அதிகமான புதிய நகர்ப்புற குடியிருப்பாளர்கள் இருப்பர்.
இந்தியாவிலும் சீனாவிலும் சேர்ந்து கூட்டாக சுமார் 1.2 பில்லியன் நகரவாசிகள் உள்ளனர்.
1975 ஆம் ஆண்டில் 8 ஆக இருந்த 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 33 ஆக அதிகரித்து உள்ளன.
ஜகார்த்தா (42 மில்லியன்), டாக்கா (40 மில்லியன்) மற்றும் டோக்கியோ (33 மில்லியன்) ஆகியவற்றில் மிக அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்பதோடுமேலும் இது 2050 ஆம் ஆண்டில் 37 ஆக உயரக்கூடும்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 10 நகரங்களில் பெங்களூருவும் ஒன்றாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
இது ஒரு சதுர கி.மீட்டருக்கு 20,000 மக்களைத் தாண்டிய மக்கள்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையுடன் சேர்த்து, பெங்களூரு இந்தியாவின் ஐந்து பெரு நகரங்களில் ஒன்றாக உள்ளது.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 50 நகரங்களில், 12 இந்தியாவில் உள்ளன.
1975 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளவில் மொத்த நகரங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது மற்றும் 2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,000 என்பதைத் தாண்டக் கூடும்.
தேசிய மக்கள் தொகை அதிகரிக்கும் வேளையில் கூட பல நகரங்கள் குறுகி வருகின்றன என்பதோடுகுறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில், குறுகி வரும் நகரங்களில் மூன்றில் ஒரு பங்கு 250,000க்கும் குறைவான மக்களைக் கொண்டுள்ளது.
எதிர்கால மேம்பாடு மற்றும் பருவநிலை இலக்குகளுக்கு நிலையான நகர்ப்புறத் திட்டமிடல் அவசியம் என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.