உலக நடுக்குவாத நோய் தினம் - ஏப்ரல் 11
April 14 , 2022
1128 days
429
- வீரியமிக்க நரம்பு மண்டலக் கோளாறான பார்கின்சன் (நடுக்குவாத) நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, ‘ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதாரம்’ என்பதாகும்.
- இலண்டனைச் சேர்ந்த டாக்டரான ஜேம்ஸ் பார்கின்சன் என்பவரின் பிறந்த நாளை இத்தினம் குறிக்கிறது.
- பார்கின்சன் நோயின் அறிகுறிகளைக் கொண்ட ஆறு நபர்களின் குறைபாடுகள் பற்றி முறையாக விவரித்த முதல் நபர் இவரே ஆவார்.
- மேலும், ஏப்ரல் மாதமானது பார்கின்சன் நோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப் படுகிறது.

Post Views:
429