உலக நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு தினம் - அக்டோபர் 12
October 18 , 2024 484 days 267 0
அக்டோபர் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையன்றும் நோய்த் தடுப்பு சிகிச்சைத் தேவைகளுடன் (PLWPCNs) வாழும் மக்களுக்காகப் போராடுவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்புச் சிகிச்சைக்கான ஒரே தனித் தீர்மானத்தின் 10 ஆண்டு கால நிறைவினைக் குறிக்கிறது.
இது “வாழ்வு முழுவதிலுமான விரிவான சிகிச்சையின் ஓர் அங்கமாக நோய்த்தடுப்பு சிகிச்சை முறையினை வலுப்படுத்த வேண்டும் என்பதை அனைத்து நாடுகளுக்கும் வலியுறுத்துகிறது.
2011 முதல் 2017 ஆம் ஆண்டு வரை, 7 மில்லியன் நோயாளிகளுக்கான சேவையுடன் நோய்த் தடுப்புச் சிகிச்சை சேவைகளின் எண்ணிக்கை 16000-லிருந்து 25,000 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் இன்றும் தேவையுள்ள சுமார் 12 சதவீதத்தினரின் தேவை மட்டுமே பூர்த்தி செய்யப் பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Ten Years Since the Resolution: How are we doing?" என்பதாகும்.