உலக நிண நீர்த் திசுப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 15
September 17 , 2023 743 days 289 0
இந்த நாள் நிண நீர்த்திசுப் புற்றுநோய் பற்றி பொதுமக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு ஊட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் நிணநீர்த் திசுப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு மற்றும் தகவல்களை வழங்க முயல்கிறது.
நிணநீர்த் திசுப் புற்றுநோய் என்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியான நிணநீர் மண்டலத்தைப் பாதிக்கும் இரத்தப் புற்றுநோய்களின் ஒரு வகை ஆகும்.
நிணநீர்த் திசுப் புற்றுநோய் பல்வேறு வடிவங்களில் ஏற்படலாம் என்ற நிலையில் அவற்றுள் இரண்டு முக்கிய வகைகள் ஹாட்ஜ்கின் நிண நீர்த் திசுப் புற்றுநோய் மற்றும் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா என்பனவாகும்.