உலக நீரில் மூழ்கி உயிரிழப்பதனைத் தடுக்கும் தினம் - ஜூலை 25
July 27 , 2024 289 days 186 0
உலகளவில் நீரில் மூழ்கி உயிரிழப்பதனைத் தடுப்பது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அந்த நடவடிக்கையினை நன்கு துரிதப்படுத்துவதையும் இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Anyone can drown, no one should" என்பது ஆகும்.
உலக சுகாதார அமைப்பானது, "Seconds can save a life" என்ற ஒரு முழக்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
உலகளவில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 236,000 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர் என்பதோடு சராசரியாக ஒவ்வொரு நாளும் 650 அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 26 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.