உலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரம் - நவம்பர் - 18
November 15 , 2018 2455 days 574 0
உலக நுண்ணுயிர் எதிர்பொருள் வாரமானது நவம்பர் 12ல் தொடங்கி நவம்பர் 18ல் முடிவடைகிறது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் இந்த வாரம் நுண்ணுயிர் எதிர்பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
இது நுண்ணுயிர் எதிர்பொருட்களின் எதிர்ப்பு பற்றி உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் பொது மக்களிடையே சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கவும் அனுசரிக்கப்படுகிறது.
நுண்ணுயிர் எதிர்பொருட்கள் விழிப்புணர்வு வாரத்தின் கருத்துருவானது தனிப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் நாடுகளுக்கு அதிக நெகிழ்வுத் தன்மையை வழங்குவதாகும்.