உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் (நவம்பர் 13-19)
November 24 , 2017 2789 days 1405 0
உலகம் முழுவதும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் தடுப்புநிலைகளைப் (Antibiotic Resistence) பற்றியும், சிறந்த மருத்துவ பழக்கங்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 13 முதல் 19 வரை உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகின்றது.
2017 ஆம் ஆண்டிற்கான உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்திற்கு உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துரு Þ “நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன் தகுதி பெற்ற ஆரோக்கிய பராமரிப்பு தொழிற் வல்லுநர்களின் ஆலோசனைப் பெறுதல்”.
முறையற்ற ஆண்டிபயாடிக் பயன்பாடானது எதிர் நுண்ணுயிர் மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையை உண்டாக்கும். அதனால் மருந்துகளின் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்கு எதிரான திறனான செயல் தடைபடும்.