உலக நோய்த்தடுப்பு மற்றும் தளவாடங்கள் உச்சி மாநாடு 2021
April 6 , 2021 1718 days 825 0
HOPE கூட்டமைப்பின் முதல் உலக நோய்த் தடுப்பு மற்றும் தளவாடங்கள் உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபியில் நடைபெற்றது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சரான டாக்டர் ஹர்ஷவர்தன் காணொலி மூலம் இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
இம்மாநாட்டில் “ஆசியா மீது கவனம் செலுத்துதல் : ஆசியா முழுவதும் தடுப்பூசி உற்பத்தி மற்றும் பங்கீடு” பற்றி விவாதிக்கப்பட்டது.
டாக்டர் ஹர்ஷ்வர்தன் இந்தியாவின் தடுப்பூசி நிர்வாகத் திட்டம் பற்றியும் கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் எனப்படும் இரண்டு இந்தியத் தடுப்பூசிகளின் உருவாக்கம் பற்றியும் இம்மாநாட்டில் குறிப்பிட்டு உரையாற்றினார்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் 45 (அ) அதற்கு மேற்பட்ட வயதுள்ள அனைத்துக் குடிமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கான சமீபத்திய முடிவினையும் அவர் குறிப்பிட்டார்.
HOPE கூட்டமைவு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள முன்னணித் தொழிற்சாலை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ள ஒரு பொது - தனியார் கூட்டாண்மை ஆகும்.
தடுப்பூசியின் உலகளாவியப் பங்கீட்டிற்காக இந்தக் கூட்டமைவு இணைந்து செயல்படுவதற்கு உறுதி பூண்டுள்ளது.