உலக நோய்த் தடுப்பு வாரம் 2022 - ஏப்ரல் 24 முதல் 30 வரை
April 25 , 2022 1198 days 431 0
உலக நோய்த் தடுப்பு வாரம், ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் கொண்டாடப் படுகிறது.
அனைத்து வயதினரையும் நோய்களிலிருந்துப் பாதுகாப்பதில் தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு தேவையான கூட்டு நடவடிக்கையை முன்னிலைப் படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு, உலக சுகாதார அமைப்பு உலக நோய்த் தடுப்பு வாரத்தை ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை கொண்டாட உள்ளது.
இந்த ஆண்டு நோய்த் தடுப்பு வாரத்தின் கருத்துரு “அனைவருக்கும் நீண்ட ஆயுள்” (Long Life for All) என்பதாகும்.