பக்கவாத அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பது, ஆரம்பக் கட்ட அறிகுறிகளை அடையாளம் காண்பது மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ நலனை வழங்குவதை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பக்கவாதம் என்பது உலகளவில் மரணத்திற்கு வழிவகுக்கும் இரண்டாவது முக்கிய காரணமாகவும், இயலாமைக்கு வழிவகுக்கும் மூன்றாவது முக்கிய காரணமாகவும் உள்ளது.
இந்தியாவில், 100,000 மக்கள்தொகைக்கு சுமார் 145 பேர் என்ற பாதிப்பு விகிதத்தில் ஆண்டுதோறும் சுமார் 18 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நாள் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதியன்று கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற உலக பக்கவாத மாநாட்டில் நிறுவப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Every Minute Counts" என்பதாகும்.