உலகம் முழுவதுமுள்ள நீண்டகாலமாக பசியில் வாடும் 815 மில்லியன் மக்களைக் குறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும் பரப்புவதற்காக வருடந்தோறும் உலக பசி தினமானது அனுசரிக்கப் படுகிறது.
மேலும் பசி மற்றும் வறுமைக்கான நீடித்த தீர்வினை கொண்டாடுவதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக பசி தினத்திற்கான முன்னெடுப்பானது 2011 ஆம் ஆண்டில் The Hunger Project எனும் அமைப்பினால் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Access Ends Hunger” (அணுகும் வசத் பசியினை ஒழிக்கும்) என்பதாகும்.