உலக பத்திரிக்கைச் சுதந்திர தினமானது உலக பத்திரிக்கை தினம் எனவும் அழைக்கப் படுகிறது.
இத்தினமானது தனது உயிரை இழந்த பத்திரிக்கையாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் உலக பத்திரிக்கைச் சுதந்திர தினத்திற்கான கருத்துரு, ‘Information as a Public Good’ (தகவல் என்பது ஒரு பொதுச் சரக்கு) என்பதாகும்.
ஆப்பிரிக்கப் பத்திரிக்கையின் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக பத்திரிக்கைச் சுதந்திர தினத்தை நிறுவியது.
இதனையடுத்து சுதந்திரமான அளவில் பத்திரிக்கையை நடத்துவதற்காக வேண்டி உருவாக்கப்பட்ட வின்ட்ஹுக் பிரகடனம் (Windhoek Declaration) நிறைவேற்றப் பட்டதை அடுத்து இத்தினம் அறிவிக்கப் பட்டது.
இந்தப் பிரகடனம் மே 03 அன்று அறிவிக்கப்பட்டதால் இந்தச் சிறப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது.