புது தில்லியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் இந்தியா முதலிடம் பிடித்தது.
இந்தியா 75 தங்கம், 69 வெள்ளி மற்றும் 64 வெண்கலம் என மொத்தம் 208 பதக்கங்களை வென்றது.
இதில் ரஷ்யா 35 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
பாராலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற பிரீத்தி பால், இதில் பெண்களுக்கான 200 மீட்டர் T35–T37 ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
ஷுபம் ஜூயல் ஆண்களுக்கான குண்டு எறிதல் F57 பிரிவில் 14.45 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
ராகேஷ்பாய் பட் ஆண்களுக்கான 200 மீட்டர் T37–T44 ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்; இப்போட்டியில் முதல் மூன்று இடங்களையும் இந்திய வீரர்களே வென்றனர்.
மனோஜ்குமார் சபாபதி ஆண்களுக்கான 800 மீட்டர் T53–T54 பிரிவில் தங்கம் வென்றார்.