உலக பால் தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ஒரு உலகளாவிய உணவாக விளங்கும் பாலின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதற்காகவும் பால் தொழில்துறையைக் கொண்டாடுவதற்காகவும் வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டின் உலக பால் தினத்தினுடைய கருத்துருவானது சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து மற்றும் சமூக-பொருளாதாரம் தொடர்பான தகவல்களை கருத்தில் கொண்டு பால்தொழில்துறையின் நிலைத் தன்மையை நிலைநாட்டுவதில் ஈடுபாடு செலுத்தும்.