உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் (WIPO) மற்றும் லூயிஸ் வணிகப் பள்ளி ஆகியவை இணைந்து வெளியிட்ட உலக புலனாகாச் சொத்து முதலீட்டு அறிக்கை 2026-ஆனது, உலகளாவியக் கண்டுபிடிப்பு மையமாக இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துரைத்து உள்ளது.
உலகின் 15 பெரிய பொருளாதாரங்களில் மகத்தான முதலீட்டில் இந்தியா அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
மென்பொருள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), அறிவுசார் சொத்துரிமை (IP), கண்டுபிடிப்பு மற்றும் நிறுவனத் திறன்கள் ஆகியவற்றின் உந்துதலால், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மகத்தான முதலீடு 7.9% வளர்ச்சியடைந்து $78.2 பில்லியனை எட்டியுள்ளது.
டிஜிட்டல் மாற்றம், புத்தொழில்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் ஆதரவுடன் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா மாறுவதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
இது சீர்திருத்தங்கள், தொழில்நுட்பத் தத்தெடுப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் வலுவடைந்து வரும் கண்டுபிடிப்புச் சூழலமைப்பைப் பிரதிபலிக்கிறது.