TNPSC Thervupettagam

உலக பெருமூளை வாத தினம் 2026 - அக்டோபர் 06

October 8 , 2026 3 days 56 0
  • இந்த நாள் பெருமூளை வாதம் (செரிப்ரல் பால்ஸி) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அனைவரையும் உள்ளடக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • பெருமூளை வாதம் என்பது அசாதாரண வளர்ச்சி அல்லது வளரும் மூளையில் ஏற்படும் காயம் காரணமாக இயக்கம், சமநிலை மற்றும் தோரணையைப் பாதிக்கும் நிலைமைகளின் ஒரு தொகுப்பாகும்.
  • தசை இறுக்கத்துடன் கூடிய பெருமூளை வாதம் மிகவும் பொதுவான வகையாகும், அதே நேரத்தில் டிஸ்கினெடிக் (dyskinetic), அட்டாக்சிக் (ataxic) மற்றும் கலப்பு பெரு மூளை வாதம் ஆகியவை பிற வகைகளில் அடங்கும்.
  • பெருமூளை வாதம் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு தீவிரமடையாத நிலை ஆகும், ஆனால் அறிகுறிகளும் அதற்கான ஆதரவுத் தேவைகளும் காலப் போக்கில் மாறக்கூடும்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Unique and United" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்