போலியோ ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஒவ்வொரு குழந்தையும் உயிர்காக்கும் போலியோ தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் பயனுள்ள போலியோ தடுப்பூசியை உருவாக்கிய டாக்டர் ஜோனாஸ் சால்க்கை கௌரவிப்பதற்காக ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பானது இந்த நாளை முதன் முதலில் தொடங்கியது.
1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகளாவிய போலியோ ஒழிப்பு முன்னெடுப்பு (GPEI) உலகளவில் போலியோவை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "End Polio: Every Child, Every Vaccine, everywhere" என்பதாகும்.