இந்த நாள் போலியோ தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தடுப்பூசியை ஊக்குவித்தல் மற்றும் போலியோவை ஒழிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "ஒன்றாக, நாம் போலியோவை முடிவுக்குக் கொண்டு வருவோம்" (Together, We End Polio) என்பதாகும்.
போலியோ என்பது போலியோ வைரஸால் ஏற்படும் அதிக தொற்று நோயாகும், இது முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது மற்றும் நிரந்தர முடக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
2014 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசியப் பிராந்தியச் சான்றிதழ் ஆணையத்தால் இந்தியா போலியோ இல்லாத நாடு என்று சான்றளிக்கப்பட்டது.
போலியோ வைரஸ் (wild poliovirus) பரவலாகக் காணப்படும் இரண்டு நாடுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மட்டுமே உள்ளன.