உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2023
April 8 , 2023 847 days 451 0
இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள், IBA உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று மீண்டும் வரலாறு படைத்துள்ளனர்.
நிது கங்காஸ் (48 கிலோ எடைப் பிரிவு), நிகத் ஜரீன் (50 கிலோ எடைப்பிரிவு), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ எடைப் பிரிவு), சவீதி பூரா (81 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் தங்கம் வென்றனர்.
சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இடம் பெற்றது.
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா நான்கு தங்கப் பதக்கங்களை வென்றது வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்.
2006 ஆம் ஆண்டில் மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி லால்ரெம்லியானி மற்றும் K.C. லேகா ஆகியோர் தங்கம் வென்றனர்.