TNPSC Thervupettagam

உலக மகிழ்ச்சி அறிக்கை 2021

March 21 , 2021 1606 days 803 0
  • இந்த அறிக்கையினை ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் என்ற அமைப்பு  வெளியிட்டுள்ளது.
  • ஒரு நாட்டின் குடிமக்கள் எவ்வளவு மகிழ்ச்சியை உணர்கிறார்கள் என்பதன் அடிப்படையில்  இந்த அறிக்கை 149 நாடுகளைப் பட்டியலிடுகிறது.
  • தொடர்ச்சியாக நான்காவது வருடமும்  உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து மீண்டும் முடிசூட்டப் பட்டுள்ளது.
  • அதனைத்  தொடர்ந்து ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி மற்றும் நார்வே ஆகிய நாடுகள்  உள்ளன.
  • 149 நாடுகளில் இந்தியா 139வது இடத்தில் உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியா 140வது இடத்தில் இருந்தது.
  • இந்தியாவின் அண்டை நாடுகளில், பாகிஸ்தான் 105வது இடத்தையும், சீனா 84வது இடத்தையும், இலங்கை 129வது இடத்தையும், வங்கதேசம்  101வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாக இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர்
  • அவற்றைத் தொடர்ந்து ஜிம்பாப்வே (148), ருவாண்டா (147), போட்ஸ்வானா (146), லெசோதோ (145) ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்