இந்த நாள் வாழ்க்கை மற்றும் நிலைத் தன்மைக்கு ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
உலக மண் தினம் ஆனது முதன்முதலில் 2002 ஆம் ஆண்டில் சர்வதேச மண் அறிவியல் ஒன்றியத்தால் (IUSS) முன்மொழியப்பட்டது.
இது 2013 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது என்பதோடுமேலும் இந்தத் தினத்தின் முதல் கொண்டாட்டம் ஆனது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம் தேதியன்று நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Healthy Soils for Healthy Cities" என்பதாகும்.