உலக மதியிறுக்கக் குறைபாடு குறித்த விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 02
April 6 , 2023 852 days 281 0
மதியிறுக்கக் குறைபாடு கொண்ட நபர்களை ஆதரிக்கச் செய்வதன் ஒரு முக்கியத் துவத்தை வலியுறுத்தவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இந்த ஆண்டானது பதினாறாவது வருடாந்திர உலக மதியிறுக்கக் குறைபாடு குறித்த விழிப்புணர்வுத் தினமாகும்.
மதியிறுக்கக் குறைபாடு என்பது தொடர் நடத்தைகள், வார்த்தைகளற்ற உரையாடல் மற்றும் சமூகம் சார்ந்த திறன் போன்ற பல்வேறு சவால்கள் நிறைந்ததாக வகைப் படுத்தப் படும் ஒரு பரந்த அளவிலான நிலைமைகளைக் குறிக்கிறது.
"Light It Up Blue" என்பது இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாகும்.