TNPSC Thervupettagam

உலக மனிதநேய தினம் - ஆகஸ்ட் 19

August 22 , 2022 1138 days 557 0
  • அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ முன்வந்த அனைத்து உதவி மற்றும் சுகாதார ஊழியர்களை இத்தினமானது அங்கீகரிக்கிறது.
  • உலகம் முழுவதும் மனிதநேயம் சார்ந்த உதவிகளின் ஒரு அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள கேனால் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில், ஈராக் நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி உட்பட 22 மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
  • ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது ஆகஸ்ட் 19 ஆம் தேதியினை உலக மனிதநேயத் தினமாக அனுசரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமம் தேவை" என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்