மருந்து வழங்கீட்டில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான சமூகங்களுக்கு மருந்தாளுநர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
இத்தினமானது மருந்தாளுநர்களின் பங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச மருந்துக் கூட்டமைப்பினால் (FIP) 2009 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இத்தினமானது நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தில் மருந்தாளுநர்களின் பங்கை எடுத்துக்காட்டும் செயல்பாடுகளுடன் உலகளவில் கொண்டாடப் படுகிறது.
மருந்தாளுநர்களை முக்கிய சுகாதாரப் பங்குதாரராக வலியுறுத்தும் விதமாக "Think Health, Think Pharmacist" என்பது 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.