TNPSC Thervupettagam

உலக மலேரியா அறிக்கை 2019

December 6 , 2019 2055 days 736 0
  • 2019 உலக மலேரியா அறிக்கையானது உலக சுகாதார அமைப்பினால் (WHO - World Health Organization) வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகளவில், 2018 ஆம் ஆண்டில் 228 மில்லியன் நபர்கள் மலேரியா நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர்.
  • அதிக எண்ணிக்கையிலான மலேரியா நோய் பாதிப்பானது உலகில் ஆப்பிரிக்கப் பிராந்தியத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பதிவாகியுள்ளன.
  • நைஜீரியாவில் அனைத்து வித மலேரியா நோய் பாதிப்பானது 24% என்ற அளவில் மிக அதிக பாதிப்பு மிக்கதாக உள்ளது.

மலேரியா பாதிப்பு – இந்தியா

  • பிளாஸ்மோடியம் விவாக்ஸ் மலேரியாவின் பாதிப்பானது (நோயின் இரண்டாவது பொதுவான வடிவம்) இந்தியாவில் மிக அதிகமாக இருந்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் மட்டும் 90% மலேரிய நோய் பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன.
  • இந்த 7 மாநிலங்கள் பின்வருமாறு: உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், குஜராத், ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம்.
  • 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியா 2018 ஆம் ஆண்டில் 2.6 மில்லியன் அளவிற்கு குறைந்த மலேரிய பாதிப்புகளையே பதிவாக்கியுள்ளது.
  • இது 85% மலேரியா நோய் பாதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் “மிகப்பெரிய முழுமையான மலேரியா நோய் குறிப்புகளைக்" கொண்ட ஒரு நாடாக இந்தியாவை உருவாக்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்