உலக மூத்தோர் கொடுமை விழிப்புணர்வுத் தினம் – ஜுன் 15
June 16 , 2019 2375 days 653 0
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 15 அன்று உலக மூத்தோர் கொடுமை விழிப்புணர்வுத் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
மூத்த குடிமக்கள் மீதான கொடுமைகள் மற்றும் அவர்களைப் பாதிப்படையச் செய்தல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
மூத்தோர் கொடுமைகளைத் தடுத்தலுக்கான சர்வதேச அமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐ.நா சபையினால் இத்தினம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
ஐ.நா. அறிக்கையின்படி மூத்த குடிமக்கள் 6 நபர்களில் 1 நபர் ஏதாவது ஒரு கொடுமைக்கு உள்ளாகின்றனர்.