உலக மூத்தோர் தவறாக நடத்துதல் விழிப்புணர்வு தினம் - ஜூன் 15
June 17 , 2018 2629 days 658 0
உலக மூத்தோர் தவறாக நடத்துதல் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 15ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினம் மூத்தோர்களை உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும் தவறாக நடத்தும் பிரச்சினைகளுக்கு எதிராக உலக கவனத்தை ஈர்க்க எண்ணுகிறது.
2012ம் ஆண்டு முதல் உலக மூத்தோர் தவறாக நடத்துதல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் நடத்தப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பொது அவை ஜூன் 15ம் தேதியை உலக மூத்தோர் தவறாக நடத்துதல் விழிப்புணர்வு தினமாக அங்கீகரித்திருக்கின்றது.