உலக மேம்பாட்டு அறிக்கை 2023: புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சமூகங்கள்
May 2 , 2023 908 days 500 0
உலக வங்கி “உலக மேம்பாட்டு அறிக்கை 2023: புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சமூகங்கள்” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இலக்கு இடங்கள், போக்குவரத்து மற்றும் இடப் பெயர்வு தொடக்க நாடுகளில் சிறந்த இடம்பெயர்வு நிர்வாகத்திற்கான அவசியத்தினை குறிப்பிட்டுக் காட்டி அதற்கான கொள்கைகளை இந்த அறிக்கை முன்மொழிகிறது.
"நிகர்- நோக்க கட்டமைப்பினை" பயன்படுத்தி இடம்பெயர்வு வர்த்தகம் பற்றி இந்த அறிக்கை ஆய்வு செய்தது.
"நிகராக்கம்" என்ற அம்சமானது தொழிலாளர் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதோடு, அது புலம்பெயர்ந்தோரின் திறன்கள் மற்றும் தொடர்புடைய பண்புக் கூறுகள் இலக்கு நாடுகளின் தேவைகளுடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது.
"நோக்கம்" என்ற சொல் ஒரு நபர் வாய்ப்பைத் தேடி நகரும் சூழ்நிலைகளைக் குறிக்கிறது.
47 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஸ்பெயின், 2100 ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்காக சுருங்கும் என கணிக்கப் பட்டுள்ளது.
மெக்சிகோ, தாய்லாந்து, துனிசியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி பெறவில்லை என்பதால் அந்த நாடுகளுக்கு விரைவில் அதிக வெளி நாட்டுத் தொழிலாளர்கள் தேவைப் படக் கூடிய சூழல் ஏற்படலாம்.
37 மில்லியன் அகதிகள் உட்பட உலகளவில் சுமார் 184 மில்லியன் மக்கள் தாங்கள் வாழும் நாட்டில் குடியுரிமை இல்லாமல் உள்ளனர்.