வெறிநாய்க் கடி (ரேபீஸ்) நோய் குறித்த விழிப்புணர்வை ஆதரிப்பதற்கும் அதைத் தவிர்க்கச் செய்வதற்குமான பல்வேறு வழிகளைப் பற்றி நன்கு விவாதிப்பதற்கும் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதியன்று மறைந்த பிரெஞ்சு அறிவியலாளர் லூயிஸ் பாஸ்டருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த விலங்கு வழி வைரஸ் தொற்று நோய் ஆனது ஒரு வெறி பிடித்த விலங்கின் கடி அல்லது கீறல் மூலம் பரவி, மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Act now: you, me, communities" என்பதாகும்.