உலக வங்கி, சிந்து-கங்கை சமவெளி மற்றும் இமயமலை அடிவாரப் பகுதிகளில் காற்று மாசுபாடு குறித்த “A Breath of Change” என்ற 2025 அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கை வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 அதிகார வரம்புகளை உள்ளடக்கியது.
இந்தப் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் மக்கள் முன்கூட்டியே இறக்கின்றனர்.
மாசுபாட்டினால் ஏற்படும் பொருளாதார இழப்பு, இந்த பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுதோறும் சுமார் 10% ஆகும்.
சிந்து-கங்கை சமவெளி மற்றும் இமயமலை அடிவாரப் பகுதி, உலகின் மிக உயர்ந்த காற்று மாசுபாடு அளவுகளைக் கொண்டுள்ளது என்பதோடு இங்குள்ள PM2.5 என்ற துகள்களின் அளவு, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை விட 8 முதல் 20 மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த அறிக்கை, காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கான “35 by 35” என்ற இலக்கை ஆதரிக்கிறது.
இது தகவல், ஊக்கத்தொகைகள், நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய “4I” கட்டமைப்பு மூலம் தீர்வுகளைப் பரிந்துரைக்கிறது.