உலக வங்கியின் புதுப்பிக்கப்பட்ட வறுமைக் கோட்டு நிலை
June 15 , 2025 482 days 493 0
உலக வங்கியானது, அதன் வறுமைக் கோட்டின் உச்ச வரம்பினை ஒரு நாளைக்கு 3 டாலராக உயர்த்தியுள்ளது.
இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்த வரம்பு ஒரு நாளைக்கு சுமார் 3.65 டாலரிலிருந்து 4.20 டாலராகவும், உயர் மட்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 6.85 டாலரிலிருந்து 8.40 டாலராகவும் அதிகரித்துள்ளது.
குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாட்டில் (LMIC) வறுமை விகிதம் 33.7 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது.
2011-12 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான தசாப்தத்தில், இந்தியா 171 மில்லியன் மக்களை தீவிர வறுமை நிலையிலிருந்து மீட்டுள்ளது.
இந்தியாவின் தீவிர வறுமை விகிதம் ஆனது, 2011-12 ஆம் ஆண்டில் 27.1 சதவீதத்தில் இருந்து ஒரு தசாப்தத்தில் 5.3% ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவில், 2024 ஆம் ஆண்டில் சுமார் 54,695,832 பேர் ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்தனர்.
இதனால், ஒரு நாளைக்கு 3 டாலர் (2021 ஆம் ஆண்டு PPP - சதவீத மக்கள் தொகை) என்ற வறுமை விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 5.44% ஆகும்.
2011-12 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் தீவிர வறுமை விகிதம் 16.2 சதவீதத்திலிருந்து 2.3% ஆகக் குறைந்துள்ளது.
கிராமப்புறத் தீவிர வறுமை 18.4 சதவீதத்திலிருந்து 2.8% ஆகவும், நகர்ப்புறத்தில் 10.7 சதவீதத்திலிருந்து 1.1% ஆகவும் குறைந்துள்ளது.
2011-12 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் 269 மில்லியன் இந்தியர்கள் தீவிர வறுமைக் கோட்டிலிருந்து விடுபட்டனர்.