உலக வங்கி & சர்வதேச நாணய நிதியம் – உயர்மட்ட ஆலோசனைக் குழு
June 23 , 2021 1607 days 690 0
மான்டேக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia) அவர்கள் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் அமைக்கப் பட்டுள்ள ஒரு உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவராவார்.
இக்குழுவிற்கு மாரி பங்கெஸ்து (Mari Pangestu), செய்லா பசார்பசியோக்லு (Ceyla Pazarbasioglu) மற்றும் லார் டு நிக்கோலஸ் ஸ்டெர்ன் (Lord Nicholas Stern) ஆகியோர் இணைந்து தலைமை தாங்குவர்.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் உருவாக்கப் பட்ட இரட்டை நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக வேண்டி இந்த குழுவானது அமைக்கப் பட்டுள்ளது.