உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாடானது சமீபத்தில் தொடங்கியது.
இது உலக வர்த்தக அமைப்பின் தலைமையகமான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடத்தப் பட்டது.
இது 2021 ஆம் ஆண்டில் நடைபெற இருந்தது.
ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இது ஒத்தி வைக்கப்பட்டது.
தடுப்பூசி விநியோகம், வர்த்தக வசதி, ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவ விநியோகச் தொடரில் மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த மாநாடானது பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.