உலக வர்த்தக அமைப்பு - உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்கள்
June 20 , 2022 1126 days 531 0
உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாடானது, மீன்பிடித்தல் குறித்த உறுதிப்பாடுகள், கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளில் (IP) பகுதியளவு தள்ளுபடி மற்றும் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த உறுதி மொழிகள் உள்ளிட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அதிகளவு மற்றும் அதிகபட்ச மீன்பிடிப்புக்குப் பங்களிக்கும் சில வகையான மீன்பிடி மானியங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.
மேலும் இது சட்டவிரோதமான, தகவல் அளிக்கப் படாத, ஒழுங்குமுறை இல்லாத மீன் பிடிப்புக்குப் பங்களிக்கும் மானியங்களையும் நீக்குகிறது.
இது கோவிட் தடுப்பூசிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்வதற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.