உலக வர்த்தக அமைப்பானது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று WTO பொது மன்றத்தில் 2025 ஆம் ஆண்டு உலக வர்த்தக அறிக்கையை வெளியிட்டது.
செயற்கை நுண்ணறிவு ஆனது 2040 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய வர்த்தகத்தினை 34% முதல் 37% வரை அதிகரிக்கக் கூடும் என்று அறிக்கை கணித்துள்ளது.
பல்வேறு கொள்கை மற்றும் தொழில்நுட்ப சூழ்நிலைகளின் கீழ் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 12% முதல் 13% வரை உயரக்கூடும்.
செயற்கை நுண்ணறிவினால் செயல்படுத்தும் பொருட்களில் உலகளாவிய வர்த்தகம் 2023 ஆம் ஆண்டில் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் அதிக வருமானம் கொண்ட நாடுகளுடனான டிஜிட்டல் இடைவெளியை 50% குறைத்தால், வருமானம் ஆனது முறையே 15% மற்றும் 14% உயரக்கூடும்.
2012 ஆம் ஆண்டில் 130 ஆக இருந்த செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொருட்களுக்கான அளவு கட்டுப்பாடுகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் கிட்டத் தட்ட 500 ஆக உயர்ந்தது.
உயர் மற்றும் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்பான்மையாக விதிக்கப் பட்டுள்ளன.
சில குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் இன்னும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொருட்களுக்கு 45% வரை பிணை சார் வரிகளை எதிர்கொள்கின்றன.
உலக வர்த்தக அமைப்பில் 80 செயற்கை நுண்ணறிவு தொடர்பான வர்த்தகக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையானது தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் பரந்த அளவிலான பங்களிப்பை ஊக்குவிக்கிறது மற்றும் சேவைகளில் வர்த்தகம் குறித்த பொது ஒப்பந்தத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட உறுதிமொழிகளை ஊக்குவிக்கிறது.