உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் 2025 - ஜூலை 06
July 13 , 2025 14 days 23 0
இத்தினமானது விலங்கு வழி நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவற்றின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1885 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் லூயிஸ் பாஸ்டர் வெற்றிகரமான முதல் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்தினார்.
மனிதர்களில் பரவும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொற்று நோய்கள் ஆனது விலங்கு வழி தொற்று மூலம் பரவுகின்றன என்பதோடு மேலும் சுமார் 75% வளர்ந்து வரும் தொற்று நோய்கள் விலங்குகளிடமிருந்து உருவாகின்றன.
"zoonoses" (zoonosis என்பதன் பன்மை) என்ற சொல் ஆனது Zoon (விலங்கு) மற்றும் Nosos (நோய்) ஆகிய கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது.