உலக விளையாட்டுத் துறை பத்திரிகையாளர்கள் தினம் 2025 - ஜூலை 02
July 13 , 2025 14 days 25 0
விளையாட்டுத் துறையின் பெரும் மேம்பாட்டிற்காக வேண்டி விளையாட்டுத் துறை சார் பத்திரிகையாளர்கள் ஆற்றும் சேவைகளைக் கொண்டாடுவதை இது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விளையாட்டுத் துறை சார் பத்திரிகை என்பது விளையாட்டுத் துறை தொடர்பான எந்தவொரு தகவல் அல்லது தலைப்பு தொடர்பான விவகாரங்களிலும் கவனம் செலுத்தும் ஒரு வகையான செய்தி அறிக்கையிடல் ஆகும்.
அச்சிடல், ஒளிபரப்பு மற்றும் இணையம் உள்ளிட்ட பல்வேறு ஊடகத் தளங்களில் விளையாட்டுத் துறை பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
சர்வதேச விளையாட்டுத் துறை பத்திரிகையாளர் சங்கம் (AIPS) ஆனது 1994 ஆம் ஆண்டில் உலக விளையாட்டு துறை பத்திரிகையாளர் தினத்தை நிறுவியது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Championing Fair Play: Reporting with Integrity and Impact" என்பதாகும்.