சர்வதேச தொழிலாளர் அமைப்பு "உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம்" என்ற தலைப்பில் தனது அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய வேலையின்மை 207 மில்லியனாக இருக்கும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.
இது 2019 ஆம் ஆண்டை விட கிட்டத்தட்ட 21 மில்லியன் அதிகமாகும்.
2022 ஆம் ஆண்டில் மொத்த வேலை நேரம் தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட 2% குறைவாகவே இருக்கும்.
2022 ஆம் ஆண்டில் 52 மில்லியன் என்ற அளவில் முழு நேர வேலைகளுக்குச் சமமான வேலைகளின் பற்றாக்குறை இருக்கும்.
இதன் 2021 ஆண்டிற்கான ஜூன் மாத அறிக்கையை ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டின் அறிக்கை ஒரு கணிசமான சரிவைக் குறிக்கிறது.
2021 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், 2019 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும் போது வேலை நேரங்களின் பற்றாக்குறை 2022 ஆம் ஆண்டில் 1 சதவிகித அளவிற்கும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.