உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கல தினம் - அக்டோபர் 08
October 14 , 2023 716 days 308 0
இந்த உலகளாவிய முன்னெடுப்பானது, ஹைட்ரஜனை ஒரு தூய்மையான மற்றும் நிலையான ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாதம்/தேதி வடிவத்தில் (10/08) எழுதப்பட்ட அக்டோபர் 08 ஆம் தேதியானது ஹைட்ரஜனின் அணு எடையைக் குறிக்கிறது (1.008).
எனவே, ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கல தினத்தினை அனுசரிப்பதற்கு இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த நாள் நெருக்கடி மிக்க உலகளாவியச் சவால்களை எதிர்கொள்வதில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கலங்களின் திறனை அங்கீகரிக்கச் செய்வதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது.