உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் மின்கல தினம் 2026 - அக்டோபர் 08
October 10 , 2026 12 hrs 0 min 35 0
ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் மின்கலத் தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் (MNRE) ஹைட்ரஜன் தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்க புது தில்லியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இந்தியாவில் ஹைட்ரஜனைப் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்தல், சேமித்தல், கொண்டு செல்லுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்த நிகழ்வு மையமாகக் கொண்டிருந்தது.
இந்நிகழ்வில் “இந்தியாவின் ஹைட்ரஜன் தரநிலைகள்: இடைவெளி மதிப்பீடு மற்றும் முதற்கட்ட செயல்முறை கட்டமைப்பு” என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (NGHM) 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் 19,744 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை இலக்காகக் கொண்டுள்ளது.