உலக AMR விழிப்புணர்வு வாரம் (WAAW) 2025 - நவம்பர் 18/24
November 24 , 2025 3 days 39 0
உலக நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் திறன் (AMR) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அது குறித்த புரிதலை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
இது முதலில் உலக சுகாதார சபையால் அதிகாரப்பூர்வமாக உலகளாவிய சுகாதாரப் பிரச்சாரமாக அங்கீகரிக்கப்பட்டது.
பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் நுண்ணுயிர்க் கொல்லி காரணிகளுக்கு எதிர்வினை ஆற்றாத சூழலில் AMR ஏற்படுகிறது.
AMR திறனால் ஏற்படும் தொற்றுகளுக்குச் சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதோடுஇது கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Act Now: Protect Our Present, Secure Our Future" என்பதாகும்.