TNPSC Thervupettagam
November 14 , 2021 1363 days 587 0
  • மஹிந்திரா XUV 700 வாகனமானது சமீபத்திய உலக NCAP (New Car Assessment Program) விபத்துச் சோதனையில் 5 நட்சத்திரத் தரத்தைப் பெற்றது.
  • இந்த வாகனமானது முதிர்பருவப் பயணிகள் பிரிவில் 5 நட்சத்திரங்களையும், குழந்தைகள் பயணிகள் பிரிவில் 4 நட்சத்திரங்களையும் பெற்றது.
  • தன்னிச்சையான அவசர தடைக்கருவியை ஒரு பாதுகாப்பு வசதியாக வழங்கிய, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய நாட்டிற்குச் சொந்தமான முதல் நிறுவனமாக மஹிந்திரா மாறியுள்ளது.
  • மஹிந்திரா XUV 300 கார் ஆனது முதிர்பருவப் பயணிகளுக்கு 5 நட்சத்திரங்களுடனும் குழந்தைப்பருவப் பயணிகளுக்கு 4 நட்சத்திரங்களுடனும் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
  • டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் வாகனமானது முதிர்பருவப் பயணிகளுக்கு 5 நட்சத்திரத் தரத்துடனும் குழந்தைப் பருவப் பயணிகளுக்கு 3 நட்சத்திரத் தரத்துடனும் ஒரு வலுவான இடத்தைப் பெற்றுள்ளது.
  • புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (New Car Assessment Program) என்பது உலகம் முழுவதும் உள்ள வாகனங்களின் பாதுகாப்புப் பகுதிகளை உறுதி செய்வதற்கான ஓர் உலகளாவிய வாகனப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பாகும்.
  • இது ஐக்கிய ராஜ்ஜியத்தில் பதிவு செய்யப்பட்ட ‘Towards Zero Foundation’ என்ற ஒரு அறக்கட்டளையின் ஒரு முக்கியத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்