உலான்பேட்டர் குத்துச்சண்டைக்கான கோப்பை (Ulaanbaatar Cup)
June 30 , 2018 2694 days 931 0
மங்கோலியாவில் நடைபெற்ற உலான்பேட்டர் கோப்பையில் இந்தியா ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது. இவற்றில் 1 தங்கப் பதக்கம், 4 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
இறுதித் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து போட்டியாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் மந்தீப் ஜங்ரா (69 கிலோ) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
சோனியா லத்தீர் (57 கிலோ), லவ்லினா பெர்கோ (69 கிலோ), ஹிமான்ஸ்சு சர்மா (49 கிலோ) மற்றும் இத்தாஸ் கான் ஆகியோர் இறுதித் தேர்வில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள் ஆவர்.
சிவ தப்பா (60 கிலோ), டெபுடென்ட வன்ஹிம்லிபுய்யா (75 கிலோ), ஆஷிஷ் (64 கிலோ) மற்றும் பீனா தேவி கொய்ஜம் (48 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.