உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட மெட்ரோ இரயில் பெட்டி - மும்பை மெட்ரோ
September 8 , 2019 2080 days 607 0
மும்பையின் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதலாவது மெட்ரோ இரயில் பெட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது அரசினால் செயல்படுத்தப்படும் நிறுவனமான BEMLயினால் தயாரிக்கப்பட்டது.
இது BEMLன் பெங்களுருப் பிரிவில் 75 நாட்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்படும் 500ற்கும் மேற்பட்ட மெட்ரோ இரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட விருக்கின்றன.
இதுபற்றி
BEML நிறுவனமானது (இதற்கு முன்பு பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) 1964 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இது இந்திய அரசின் “மினிரத்னா பிரிவு 1-ல் உள்ள ஒரு பொதுத் துறை நிறுவனமாகும்.”