உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவில் முதல் CAR T-செல் சிகிச்சை
November 12 , 2025 8 days 78 0
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் NexCAR19 எனப்படும் வெவ்வேறு மரபுத்திரி எண்ணிக்கைக் கொண்ட நோய் எதிரணு உற்பத்தி ஊக்கி ஏற்பி (Chimeric Antigen Receptor-CAR) T-செல் சிகிச்சையானது சமீபத்தில் அறிமுகப் படுத்தப் பட்டது.
இந்த சிகிச்சை இரத்தப் புற்றுநோய் (லுகேமியா) மற்றும் நிணநீர்க் குழியப் புற்றுநோய் (லிம்போமா) உள்ளிட்ட B-செல் இரத்தப் புற்றுநோய்களை குறிவைக்கிறது.
NexCAR19 ஆனது, டாடா நினைவு மருத்துவமனையுடன் இணைந்து, பாம்பே இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கீழான தொழிற்காப்பில் உள்ள ImmunoACT எனும் புத்தொழில் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
CAR T-செல் சிகிச்சையானது, புற்றுநோய் செல்களைத் தாக்குவதற்காக என்று மரபணு மாற்றப் பட்டு, பின்னர் உடலில் மீண்டும் உட்சேர்க்கப்படுகிறது.